April 6, 2026
3, Kaveri Nagar, Seruvangi, Gudiyatham-632602 Vellore District Tamilnadu

அனைத்திந்திய கால்பந்து சங்கம் இந்திய கால்பந்து அணிக்கான 2047 கனவுத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்காக எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதற்கான செயல்திட்டங்களையும் வகுத்துள்ளது.

2036க்குள் இந்திய கால்பந்து அணியை ஆசிய கால்பந்து தரவரிசையில் 7ஆவது இடத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், 2047ல் ஆசிய தரவரிசையில் 3ஆவது இடத்திற்குக் கொண்டு செல்லவும் கனவுப் பயணத்தை வரையறுத்துள்ளது.

இதற்கான 11 திட்டத் தலைப்புகளை வகுத்துள்ளது.

நிர்வாகம், உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், குழுக்கள், பயிற்சியாளர், கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள், சந்தைப்படுத்தல், திறமை மேம்பாடு, அடையாளம் கண்டுபிடித்தல், போட்டிகள், தேசிய அணி செழுமை

ஆகிய காரணிகளை முன்னிறுத்தியுள்ளது.

இதற்காக முன்னெடுப்புகள் 6 சுழற்சிகளாகப் பிரிக்கப்படுகின்றன.

இந்திய கால்பந்து பின்தங்கக் கூடாது என்பதற்காக 2047ல் இந்தியா நம்ப முடியாத இடத்தை நோக்கிப் பயணிக்கும்.

ஆசியாவின் முதல் 3 லீக்குகளில் இடம்பிடித்து நான்கு இடங்களுக்குள் மேம்படுவது, பெண்கள் மற்றும் ஆண்கள் கால்பந்து அணிகளிலிருந்து குறைந்தபட்சம் ஒரு நட்சத்திர வீரரையாவது இந்தியாவுக்காக உருவாக்குவது.

கால்பந்து பூங்காக்கள், 2026ல் ஒரு பெரிய கால்பந்து பூங்கா, 2047க்குள் உலகக் கால்பந்துப் போட்டிகளுக்கு ஏற்ற 13FIFA தர விளையாட்டு அரங்கங்கள் மறுறும் 12 ஸ்மார்ட் விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படும்,

நிர்வாகம், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மாற்றம், நடுவர், கிளப்புகள், பயிற்சியாளர் கல்வி, அடித்தட்டு, சந்தைப்படுத்தல் & வணிகமயமாக்கல், திறமை மேம்பாடு மற்றும் அடையாளம், போட்டிகள், தேசிய அணி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

    X