April 6, 2026
3, Kaveri Nagar, Seruvangi, Gudiyatham-632602 Vellore District Tamilnadu
விளையாட்டு

ஒலிம்பிக் 2024ல் இந்தியாவின் வெற்றியாளர்கள்

தினவானம்

23.07.2024 அன்று பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் 33ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 11.08.2024 அன்று நிறைவடைந்தது.

நிறைவுநாள் விழாவில் அமெரிக்க இசைக்கலைஞர்கள் பில்லி ஜலிஷ், ஸ்னூப் டாக் மற்றும் ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் அமெரிக்க இசைக்குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஒரு சண்டைக்காட்சியை நடத்திப் பார்வையாளர்களுக்கு விருந்தளித்தார்.

வெற்றிபெற்ற அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் சிறப்புச் செய்யப்பட்டடதும், 2028ல் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் பொறுப்பாளர்களிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

நிறைவு விழாவில் இந்தியா சார்பாகத் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனுபாகர், ஹாக்கி அணிக்காக வெண்கலம் வென்றுகொடுத்ததில் முதன்மைப்பங்கு வகித்த ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமையில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்.

மகளிர் பிரிவிலும் ஆடவர் மகளிர் கலப்புப் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை மனு பாகர் வென்றார்.

ஹாக்கி ஆண்கள்பிரிவு போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

துப்பாக்கிச்சுடுதல் ஆண்கள் பிரிவில் ஸ்வப்னிஸ் குசாலே ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஈட்டி எறிதல் ஆண்கள் பிரிவு போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மல்யுத்தம் ஆண்கள் பிரிவு போட்டியில் அமன்ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தியா 6 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 71ஆவது இடத்தைப் பிடித்தது.

அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்கள் பெற்று முதலிடம் பெற்றது.

சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்தது.

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video
    X