ஒலிம்பிக் 2024ல் இந்தியாவின் வெற்றியாளர்கள்
23.07.2024 அன்று பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் 33ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 11.08.2024 அன்று நிறைவடைந்தது. நிறைவுநாள் விழாவில் அமெரிக்க இசைக்கலைஞர்கள் பில்லி ஜலிஷ், ஸ்னூப் டாக் மற்றும் ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் அமெரிக்க இசைக்குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஒரு சண்டைக்காட்சியை நடத்திப் பார்வையாளர்களுக்கு விருந்தளித்தார். வெற்றிபெற்ற அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் சிறப்புச் செய்யப்பட்டடதும், 2028ல் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் பொறுப்பாளர்களிடம்


